க்ரைம்

திருப்புவனம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணை காரில் ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்புவனம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் பணிபுரிகிறார். இவர், கடந்த ஜூலை 18-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மேலவெள்ளூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (22) என்பவர் அவ்வழியே காரில் வந்துள்ளார்.

மேலும் அவர் அடிக்கடி அந்த பெண் பணிபுரியும் பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளார். அந்த அறிமுகத்தை பயன்படுத்தி, அந்த பெண்ணை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றினார்.

பின்னர் செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் அப்பெண்ணை இறக்கி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து ஓட்டுநர் முத்துப்பாண்டியைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT