ஜோதிமணி, சங்கரபாண்டியன் 
க்ரைம்

அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதியை கொன்று நகை கொள்ளை

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதி நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன்(71). இவரது மனைவி ஜோதிமணி(65). ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். இவர்களது மகன் சென் னையில் பணிபுரிகிறார். நேற்று பிற்பகலில் உறவினர்கள் சங்கரபாண்டியனின் வீட்டுக்கு வந்தனர். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது. பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஆசிரியத் தம்பதியைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்து சென்றிருக் கலாம் என்ற கோணத்தில் விசார ணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT