க்ரைம்

விருதுநகர் | பள்ளி தலைமை ஆசிரியையை வழிமறித்து கத்தியைக் காட்டி 10 பவுன் சங்கிலி பறிப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே நடந்து சென்ற பள்ளித் தலைமை ஆசிரியையை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு மாத்தநாயக்கநன்பட்டி சாலையில் உள்ள வள்ளுவன்நகரைச் சேர்ந்தவர் அய்யம்மாள்ராணி (52). மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இருவரில் அடையாளம் தெரியாத ஒருவர் இறங்கி வந்து அய்யம்மாள்ராணி மீது கத்தியை வைத்து மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றார். இதுகுறித்து, தலைமை ஆசிரியை அய்யம்மாள் ராணி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து நகை பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT