கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட் டம் சின்னசேலம் அருகே கனியா மூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை விடுதியின் 2-வது மாடியிலிருந்து இருந்து விழுந்து மாணவி மதி உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாணவியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கி பயின்று வந்த மற்ற மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக இரு பெண் ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆண் ஆசிரியரி டம் சின்னசேலம் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவியின் உடலை வாங்குவோம் என பெற்றோர் தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.