க்ரைம்

மகளுக்கு பாலியல் வன்கொடுமை தந்தைக்கு 20 ஆண்டு சிறை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தெற்கு விருதாங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான லாரி டிரைவர் ஒருவர், கடந்த 02.04.2021-ல், அவரது 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில், நீதிபதி எழிலரசி நேற்று அந்த லாரி டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ரூ. 5 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞராக கலாசெல்வி ஆஜரானார்.

SCROLL FOR NEXT