க்ரைம்

சேலம் அருகே சிறுமி கடத்தல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சேலம் அருகே சிறுமியை கடத்திய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (22). கடந்த 6-ம் தேதி 17-வயது சிறுமியை கடத்திச் சென்றார்.

இதுகுறித்து கருமந்துறை போலீஸில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுசம்பந்தமாக வாழப்பாடி அனைத்து மகளிர்காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு திருமண ஆசை ஆசைகாட்டி ஆனந்தகுமார் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கண்டு பிடித்து சிறுமியை மீட்டனர். ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT