க்ரைம்

மயிலாடுதுறை: மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவரைக் கொன்ற மனைவி கைது

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(53). இவரது மனைவி அமுதா(37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி மது அருந்திவிட்டு, மனைவியிடம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மகாதேவன் வழக்கம்போல குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றபோது, அமுதா அரிவாளை பறித்து, மகாதேவனை சரமாரியாக வெட்டியதில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அமுதா மணல்மேடு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அமுதாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT