க்ரைம்

சேலத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் 59 பவுன் நகை; ரூ.1.30 லட்சம் திருட்டு

செய்திப்பிரிவு

சேலம் அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் 59 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.30 லட்சத்தை திருடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னு (62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் பழநிக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 59 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தடயவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT