க்ரைம்

சென்னை | ரூ.50 கோடி மோசடி: 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய கன்டெய்னர்களை வாடகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை ஆவண மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முதல் கட்டமாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ், டேவிட், கோகுல்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கார், 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்பட்ட பொன்ராஜ், டேவிட் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT