தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியை சேர்ந்த 82-வயது மூதாட்டியிடம் மோசடி நபர் ஒருவர் செல்போனில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை போலீஸ் அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது மூதாட்டியின் போன் எண் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதியிடம் இருந்ததாக மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து மூதாட்டியை விடுவிக்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். மோசடி நபர் கூறிய வங்கி எண்களுக்கு 73.3 லட்சம் பணம் அனுப்பியுள்ளார் மூதாட்டி. தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மோசடி நபரின் 5 செல்போன் எண்களைக் கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.