பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 16 வயது பள்ளி மாணவியை வன்கொடுமை செய்ததாக, 16 வயது மாணவர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று போக்ஸோ வழக்கில் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா மகன் சரத்குமார்(25). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவனும், 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவியை, கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அண்மையில் மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரத்குமார் மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.