க்ரைம்

கோவையில் கணவரை தாக்கியதாக பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (56). இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

இவரது மனைவி வீரம்மாள் (46), நீலகிரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறிமாறி கைகளாலும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக இருவரும் தனித்தனியாக தந்த புகாரின்பேரில், தாக்குதல், தகாத வார்த்தைகளில் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இருவர் மீதும் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT