சிவகங்கை: சிவகங்கையில் குடும்ப பிரச்சினை யில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை சூரக்குளம் சாலை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மார்க் ஆண்டனி (43). இவரது மனைவி கற்பகம்(40). இவர்களுக்கு ரவீந்திரன்(22), நவீன்(18) ஆகிய மகன்கள் உள்ளனர். மார்க் ஆண்டனி கர்நாடகாவில் கரி மூட்டமிடும் வேலை செய்கிறார். சில நாட் களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பினார்.
இந்நிலையில் அவ ருக்கும், மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மார்க் ஆண்டனி, உடற்பயிற்சி கருவியால் கற்பகத்தின் தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.
சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப்பதிந்து மார்க் ஆண்ட னியைக் கைது செய்தனர்.