மானாமதுரை பேருந்து நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர். 
க்ரைம்

மானாமதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஏடிஎம்-க்குள் புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க சில நிமிடங்கள் முயற்சித்துள்ளார்.

பணம் எடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து மானாமதுரை போலீஸார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT