க்ரைம்

கரூர் | சிறார் திருமண தடுப்புச் சட்டத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்- நாச்சியம்மாள் ஆகியோரின் மகன் ராஜா(22). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று முன்தினம் குமாரமங்கலம் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து குளித்தலை குழந்தைகள் நல அலுவலர் சரோஜா அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார், ராஜா, அவரது பெற்றோர் கோவிந்தராஜ், நாச்சியம்மாள், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது, சிறார் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT