மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் மதுரையைச் சேர்ந்த 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் (47), தென்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (28). இருவரும் கடந்த 2017-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் சோழவந்தான் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் நாச்சியப்பனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.