வள்ளியூர்: வள்ளியூர் ராஜரத்தினம் நகரைச் சேர்நதவர் மரியதாசன், விவசாயி. இவரது மனைவி கிறிஸ்டி. சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
வள்ளியூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சிதம்பரம், வினுகுமார், செல்வ தாஸ் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சூசைராஜ் மகன் செல்வராஜ், இளையபெருமாள் மகன் சங்கர், திசையன்விளை இடைச்சிவிளை அந்தோணி ராஜன் மகன் மைக்கேல் ராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 37.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.