திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 
க்ரைம்

திருநெல்வேலி | 6 மாத பெண் குழந்தை மீட்பு: நிருபர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் - இசக்கியம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 20-ம் தேதி தங்கள் குழந்தையை காண வில்லை என பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இசக்கியம்மாள் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணை நடத்தி 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தையை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகார் அளித்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றது. கண் காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் உதவியுடன் 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தாக ஆலங்குளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் கார்த்திகேயன்(34), கீழ பாப்பாக்குடி பள்ளிக்கூட தெரு முருகன் மனைவி கனியம் மாள்(57), ஜெகன் மனைவி முத்துசெல்வி(30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

குழந்தையை மீட்ட பாப்பாக்குடி போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

SCROLL FOR NEXT