சிவகாசி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்ததாக திருத்தங்கலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முனியசாமி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (65). பைண்டிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கார்த்திகேயன் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, திருத்தங்கல் போலீஸார் முதியவர் நாகராஜை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.