தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (22). இவர், கடந்த 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சுமத்தப்பட்ட பிரவீன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.