க்ரைம்

தூத்துக்குடியில் தொழில் போட்டியில் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை: மற்றொரு கடைக்காரர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழில் போட்டி யில் பஞ்சர் கடை உரிமையாளரை கொலை செய்த இளை ஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேலன்புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை அவரது கடையில் கருப்பசாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொழில் போட்டி காரணமாக கருப்பசாமி கடைக்கு எதிர்புறம் பஞ்சர் கடை நடத்தி வரும் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செல்லகுட்டி என்ற குட்டி (27) என்பவர் கருப்பசாமியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கருப்பசாமி பஞ்சர் பார்ப்பதற்கு குறைவான கட்டணம் வாங்கியதால், தனக்கு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை கொலை செய்ததாகவும் செல்லகுட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT