க்ரைம்

விழுப்புரம் | முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் பெண் எஸ்பியிடம் விசாரணை நிறைவு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதித்துறை நடுவர் புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியும் ஆஜரானார். அவரிடம், சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் 13-வது நாளாக குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை இவ்வழக்கை ஒத்திவைத்தும், அன்று (17-ம் தேதி) அரசு தரப்பு சாட்சிகளான ஐஜி ரூபேஷ்குமார், எஸ்பி மகேஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர் பிதுன்குமார் உள்ளிட்ட மூவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவும் நீதித்துறை நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT