க்ரைம்

விருதுநகர் | கடனை திருப்பிக் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி கொலை

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகரில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் கட்டிடத் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் லட்சுமிநகர் அப்பர் தெருவைச் சேர்ந்தவர் முனி யாண்டி. கட்டிடத் தொழிலாளி. அவருடன் ராமநாதபுரம் மாவட்டம், பெரும்குலத்தைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (48) என்பவரும் கட்டிட வேலை செய்து வந்தார்.

இருவருக்கும் உள்ள பழக்கத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் முனியாண்டியிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார்.

இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று மாலை முனியாண்டிகும், சவுந்தர்ராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனியாண்டியின் மகன் அஜித் (23) சவுந்தர்ராஜனை தாக்கியதில், அவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

அவரை மீட்டு முனியாண்டி உள்ளிட்டோர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT