காஞ்சிபுரம்: சென்னை, போரூர் ஆர்.ஏ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ் என்கிற சுராஜ்குமார் (35). இவர் புதுநல்லூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
அதே நிறுவனத்தில் மற்றொரு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு ஒன்றில் சுராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் செந்தூர்பாண்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில்நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.இளங்கோவன், செந்தூர்பாண்டியனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.