க்ரைம்

வேலூர் | பெயின்டரை கொலை செய்த நண்பர் கைது

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் ஓல்டுடவுன் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). பெயின்டர். இவரது நண்பர் வசந்தபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முன்னா என்கிற அகேஷா (37). இவர் மீது ஏற்கெனவே வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரும் நண்பர்கள் என்பதால் முன்னாவின் வீட்டுக்கு மணிகண்டன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது, முன்னாவின் மனைவியுடன் மணிகண்டனுக்கு கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்துகொண்ட முன்னா, நண்பர் மணிகண்டனை கண்டித்துள்ளார்.

ஆனால், இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மணிகண்டனை மதுபானம் குடிப்பதற்காக நேற்று முன்தினம் காலை முன்னா அழைத்துள்ளார்.

அதன்படி, இருவரும் கோட்டை பெரியார் பூங்கா பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு, இருவரும் மதுபானம் குடித்தபோது முன்னாவின் மனைவி குறித்து மணிகண்டன் தவறாக பேசியுள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிகண்டனை கீழே தள்ளி பெரிய கல்லை தூக்கி அவர் மீது போட்டுவிட்டு முன்னா தப்பியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சத்தமிட்டுள்ளார். அதை கேட்டு ஓடிச்சென்ற பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மணிகண்டன் உயிரிழந்தார். இ

தையடுத்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ததுடன், தலைமறைவாக இருந்த முன்னா என்ற அகேஷாவை நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT