க்ரைம்

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வேலூர் மத்திய சிறை வார்டர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் ஆண்கள் மத்திய சிறையில், சிறை காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு நடத்திய திடீர் சோதனையில் தண்டனை கைதிகள் இருந்த தொகுதியில் 150 கிராம் கஞ்சாவும், 7-வது தொகுதியில் இருந்து செல்போன் பேட்டரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி கஞ்சா, செல்போன் பேட்டரி உள்ளே வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தலைமை சிறை வார்டர் விஜயகுமார் மூலம் அவை கைதிகளுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல் ரகுமான் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் செல்போன் பேட்டரி தொடர்பாக பாகாயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT