க்ரைம்

தாம்பரம் | ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி பால் மற்றும் இவரது மனைவி வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் இருந்த 100 பவுன் அளவுக்கான நகைகள் திருடுபோயின.

இதுதொடர்பான புகாரின்பேரில் மணிமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டில் வேலை செய்து வரக் கூடிய பணிப்பெண் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அந்த நகைகளை அந்தப் பணிப் பெண்தான் எடுத்துச் சென்றாரா அல்லது வேறு யாராவது திருடினார்களா என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT