க்ரைம்

விழுப்புரம் | முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் பெண் எஸ்பியிடம் 12-வது நாளாக விசாரணை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த ஆட்சி யில், அப்போதைய முதல்வரின்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதி புஷ்பராணி முன்னி லையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியும் ஆஜரானார். அவரிடம், சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று 12-வது நாளாக குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நீதிமன்றத்தின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டு குறுக்கு விசாரணை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணை முடிவடையாததால் வரும் 15-ம் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT