க்ரைம்

செங்கல்பட்டு | சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல சாமியார் சிவசங்கர் பாபா மீது 6 போக்ஸோ 2 பெண் வன்கொடுமை உள்ளிட்ட 8 வழக்குகள் சிபிசிஐடி போலீஸாரால் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 8 வழக்குகளிலும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று தனது வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்ஸோ வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

இதில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி, ஜூலை மாதம் 15-ம் தேதி மீண்டும் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT