மதுரை: மதுரை நீதிமன்ற வளாகத்தில் சுற்றிய போலி பெண் வழக்கறிஞர் ஒருவர், நீதிபதி அறிவுரைப்படி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார்.
மதுரை ஆனையூரில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வலீலா (37). இவர் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத் தில் அளித்துள்ள புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: எனது கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தபோது, கண்ணியம்மாள்(36) என்பவர் வழக்கறிஞர் என அறிமுகமானார்.
அவர் எனது வழக்கு தொடர்பாக ஆஜராவதாகக் கூறி ரூ.5 ஆயிரம் கட்டணம் பெற்றார். நேற்று மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தேன். அவரை சந்தித்தபோது, மேலும், ரூ.5 ஆயிரம் கேட்டார்.
ஏற்கெனவே கொடுத்த கட்ட ணத்துக்கு அவர் எவ்வித வேலையும் செய்யவில்லையே என்றபோது, கேட்ட தொகையை தரவில்லை எனில் கொன்று விடுவேன் என மிரட்டினார்.
இது குறித்து அங்கு வந்த வழக்கறிஞர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னையும், கண் ணியம்மாளையும் மாவட்ட நீதிப தியிடம் அழைத்துச் சென்றனர். அண்ணாநகர் காவல் நிலையத் தில் கண்ணியம்மாளை வழக் கறிஞர்கள் உதவியோடு ஒப் படைத்து, புகார் அளிக்க நீதிபதி அறிவுறுத்தினார்.
அதன்படி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் போலி வழக்கறிஞர்கள் ஒழிப்புக் குழு உறுப்பினர்கள் முத் துக்குமார், ரமேஷ், வீரபெருமாள் ஆகியோருடன் வந்து இப்புகாரை அளிக்கிறேன். கண்ணியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகார் குறித்து போலீஸார் விசாரித்தபோது, மதுரை புதூ ரைச் சேர்ந்த கண்ணியம்மாள் வழக்கறிஞர் இல்லை என்பதும், திருமணம் ஆகாத அவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்போல் நடித்து சிலரிடம் பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக் கின்றனர்.