விருதுநகர்: விருதுநகரில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 18 கிலோ எடையுள்ள ரூ.52 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலை வழியாக சிலர் காரில் குட்கா பொருட்களை கடத்திச் செல்வதாக விருதுநகர் கிழக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 116 காலனி பகுதியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, 18 கிலோ எடையுள்ள ரூ.52 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரில் வந்த பாத்திமா நகரைச் சேர்ந்த ஜேசுராஜ் (36), அல்லம்பட்டியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) ஆகியோரை கைது செய்தனர். காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.