கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் என்பவரது மகன் பேச்சிமுத்து (18). இவர் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தீராத வயிற்றுவலி காரணமாக வீட்டில் இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அதனை யடுத்து, பேச்சிமுத்துவை கடுமையான தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த மாணவர் பேச்சிமுத்து நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.