க்ரைம்

தூத்துக்குடி | முதியவர் கொலை: மகன் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனகன்விளையைச் சேர்ந்தவர் முத்து (75).

இவருக்கு ரோஜா (65) என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சுடலைமணி (50) சென்னையில் கூலித்தொழில் பார்த்து வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து வந்த சுடலைமணி திரும்பிச் செல்லாமல் பெற்றோருடன் இருந்துள்ளார்.

தந்தை முத்துவுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், சுடலைமணி அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார்.

அப்போது அவரது தாய் ரோஜா, ‘கசாயம் குடித்தால் போதும் சரியாகிவிடும், நீ ஒன்றும் அழைத்துச் செல்ல வேண்டாம்’ என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் தாய் ரோஜாவுக்கும், சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தை முத்து தடுத்துள்ளார். சுடலைமணி விறகு கட்டையால் தாக்கியதில் முத்து உயிரிழந்தார். குரும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT