கைது செய்யப்பட்ட ராமதாஸ் 
க்ரைம்

ஃபேஸ்புக் மூலம் கார் விற்பதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி: கரூர் நபரை கைது செய்த திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ஃபேஸ்புக் மூலம் கார் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த கரூரை சேர்ந்த நபரை, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே அவிநாசி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் ஃபேஸ்புக் பக்கத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கொடுத்த கார் விற்பனை விளம்பரப் பதிவினை பார்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமதாஸை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கார்த்திகேயன் பேசியுள்ளார்.

பின்னர், காரின் விலையை நிர்ணயம் செய்த நிலையில், கார்த்திகேயன் அதற்காக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் தொகையை ராமதாஸ் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.

இதனிடையே, பணம் செலுத்திய பின்பு, ராமதாஸ் தொலைபேசி அலைப்பை எடுக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அந்த ஃபேஸ்புக் பதிவினை ஆய்வு செய்து ராமதாஸை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT