தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பள்ளி மாண விகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவர் அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய அவர், தேவகோட்டை மகளிர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.