ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் கடந்த 5 நாட்களுக்கு முன் 17 வயது மைனர் பெண் மீது நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 5வது குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ்பகுதி என்பது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு பகுதியாகும். இங்கு, கடந்த மாதம் 28-ம் தேதி 17 வயது மைனர் இளம்பெண் ஒருவர் ‘பப்’ க்கு வந்தார். பின்னர் வீடு திரும்புகையில், அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி விலை உயர்ந்த 2 கார்களில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை அழைத்துக்கொண்டு, அந்த காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த செயலில் ஆளும் கட்சியை சேர்ந்தஎம்.எல்.ஏவின் மகன், கவுன்சிலரின்மகன் உட்பட 6 பேர் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை போலீஸார் சாதுத்தீன் மாலிக் (18), அமீர் கான் (18) உட்பட 17 வயது எம்.எல்.ஏவின் மகன் என மேலும் இரு மைனர்களும் உள்ளனர் என போலீஸார் விசா ரணையில் தெரியவந்தது. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர்.
ஆனால், இந்த வீடியோவை தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியது. அதன் பின்னர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துஇதுவரை 4 பேரை கைது செய்தனர். நேற்று மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் உபயோகப் படுத்தப்பட்ட இரு கார்களையும், போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ஒரு காரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் செருப்புகள், தலைமுடி போன்றவை கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மற்றொரு கார் ஒரு பண்ணைவீட்டில் மறைத்து வைக்கப்பட் டிருந்தது. அதனையும் போலீஸார்பறிமுதல் செய்துள்ளனர். அதுஎம்.எல்.ஏவின் மகனுக்கு சொந்த மானது என கூறப்படுகிறது. ஆனால், அந்த கார் சுத்தமாக கழுவி விட்டதால் சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் எம்.எல்.ஏவின் மகனும்கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அந்த வீடியோ பாஜக எம்.எல்.ஏவுக்கு எப்படி கிடைத்தது என்பதை அறிய பாஜக எம்.எல்.ஏ ரகுநந்தனிடம் போலீஸார் விசாரணை நடத்தி யுள்ளனர். இந்நிலையில், இவ் வழக்கு குறித்து முழு விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென தெலங் கானா மாநில ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் நேற்று உத்தர விட்டுள்ளதால் மேலும் பரபரப் பாகி உள்ளது.