பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பெற்றோருடன் வசித்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்துவரும் உத்தரபிரதேச மாநிலம் குஷின் நகரைச் சேர்ந்த முகேஷ் (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், திருமணம் செய்துகொள்வதாக முகேஷ் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச் சென்று பாலியல்தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கோவை ரயில் நிலையம் அருகே சிறுமியுடன் நின்று கொண்டிருந்த முகேஷை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.