புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸார், அதிரடிப்படை போலீஸார், குற்றப்பிரிவு காவலர் களுடன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப் படும்படி வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
ஜாலியாக வாழ திருடினர்
விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (37), சங்கர் (37) ஆகியோர் என்பதும், கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் ஜாலியாக வாழ வேலைநேரம் முடிந்த பிறகு இருசக்கர வாகனங்களைத் திருடி விற்றது தெரிய வந்தது.
இவர்கள் உருளையன்பேட்டை காவல்நிலைய பகுதியில் ஒரு வாகனம், முதலியார்பேட்டை காவல் நிலைய பகுதியில் 2 வாகனங்கள், நெட்டப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் ஒரு வாகனம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து சிலரம்பரசன், சங்கர் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.