க்ரைம்

சேலம்: 7 வயது மகனுக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த மெக்கானிக் மீது வழக்கு

செய்திப்பிரிவு

சேலம்: தீவட்டிப்பட்டி அருகே 7 வயது மகனுக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்த மெக்கானிக் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த காடையாம்பட்டி உம்பிலிக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மெக்கானிக் தங்கராஜ் (40). இவரது மனைவி செல்வபிரியா. இவர்களது மகள்கள் கிருத்திகா, ஜேசிகா, மகன் மோகித் (7). இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மோகித் தீராத ஆசை கொண்டிருந்தார். மகனின் ஆசையை அறிந்த தங்கராஜ், அவருக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.70 ஆயிரம் மதிப்பில் சிறிய அளவில் இருசக்கர வாகனத்தை தயாரித்து வழங்கியுள்ளார்.

மேலும், அவ்வப்போது மகன் மோகித் பின்னால் அமர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட தங்கராஜ் கற்றுக் கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கராஜ் பின்னால் அமர்ந்து கொண்டு, மகன் மோகித் இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக தங்கராஜ் மீது சாலை விதிமுறைகளை மீறியதாக தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT