க்ரைம்

புதுச்சேரி அழகு நிலையத்தில் பாலியல் தொழில்: 2 பேர் கைது; 4 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி சாரம் பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த அழகு நிலையத்தில் 4 பெண்களை வைத்துபாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அழகு நிலையத்தின் உரிமையாளரான சாரம் லெனின் வீதி குயவர்பாளையத்தைச் சேர்ந்த தெய்வநாயகம், வாடிக்கையாளரான ரெட்டியார்பாளை யத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

4 பெண்கள் மீட்பு

மேலும், அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT