க்ரைம்

கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1151 கிலோ குட்கா பறிமுதல்: ஓசூரில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு சரக்கு வாகனத்தில் மாட்டுத் தீவனங்களுக்கிடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 1151 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை ஓசூரில் போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குட்கா கடத்தப்படுவதாக பாகலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் பாகலூர் அடுத்துள்ள கக்கனூர் சோதனைச்சாவடியில் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சரக்கு வாகனத்தில் மாட்டுத் தீவனங்களுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 1151 கிலோ எடையுள்ள ரூ.5.80 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தலில் ஈடுபட்ட சிவகங்கையைச் சேர்ந்த மூர்த்தி (24), வடமாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் புன்னாராம் (24) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், குட்கா கடத்த லுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT