க்ரைம்

கோயில் சிலைகளை புனரமைக்க நிதி திரட்டிய விவகாரம்: யூடியூபர் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு

செய்திப்பிரிவு

ஆவடி: சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களின் சிலைகளை புனரமைப்பதற்கு நிதி திரட்டியதாக கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களில் உள்ளபழுதான சிலைகளை புனரமைப்பதாக கூறி, ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்தகார்த்திக் கோபிநாத் என்ற யூடியூபர், சமூக வலை தளம் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில், பொதுமக்களிடம் நிதி வசூலிக்க கார்த்திக் கோபிநாத் இரு வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, அந்த வங்கி கணக்குகளை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடிதம் எழுத இருப்பதோடு, கார்த்திக்கோபிநாத், செயலி மூலம் பணம் வசூலித்தது தொடர்பாக ஆய்வு செய்ய, அவரின் மொபைல் போனைசைபர் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT