க்ரைம்

திருவண்ணாமலை | மாயமான மாணவி உயிரிழந்த நிலையில் மீட்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் வசிப்பவர் ரவி. இவரது மகள் ஹரிப்பிரியா(16). இவர், அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளார்.

வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், ஆகாரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஹரிப்பிரியாவின் உடல் மிதப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ஹரிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிப்பிரியாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT