சேலம் உடையாப்பட்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் மசாலா நிறுவனத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 
க்ரைம்

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வில் சேலத்தில் கலப்பட மசாலா தூள் 637 கிலோ பறிமுதல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் மசாலா நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 637 கிலோ கலப்பட மசாலா தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் உடையாப்பட்டியில் தனியார் மசாலா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான மசாலா பொடிகளிலும் கலப்படம் செய்வதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மசாலா நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் கலப்பட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கலப்பட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த மிளகுதூள் 320 கிலோ உட்பட 637 கிலோ மசாலா தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . இதுகுறித்து உரிமையாளர் பழனியப்பனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT