க்ரைம்

மொபட்டில் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே மொபட்டில் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த தொரவியிலுள்ள சோதனை சாவடியில், நேற்று அதிகாலை விக்கிரவாண்டி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர்.மொபட்டில் இருந்த மூட்டையில் சந்தன மரக்கட்டைகள் சுமார் 10 கிலோஇருப்பது தெரியவந்தது.

மொபட்டில்வந்தவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அயோத்திபட்டணத்தைச் சேர்ந்த சென்ன கிருஷ்ணன்(44) எனவும், விற்பனைக்காக சந்தன மரக்கட்டைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர். சந்தன மரக்கட்டைகளையும் , மொபட்டையும் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT