க்ரைம்

குடோனை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்: புதுச்சேரியில் 2 பேர் கைது, 3 பெண்கள் மீட்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடோனை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்நடத்திய இருவர் கைது செய்யப் பட்டனர். மேலும், 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்ப டைக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் குடோனை வாடகைக்கு எடுத்து, அங்கு தனித்தனி அறைகளை அமைத்து, படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, பாலியல் தொழில் செய்து வருவதாக வடக்கு பகுதி போலீஸ் எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத் தது.

இதைத் தொடர்ந்து எஸ்.பிபக்தவச்சலம் உத்தரவின் பேரில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு குடோனை சோதனையிட்டனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் எந்தவித உரிமமும் நகராட்சியிடம் பெறாமல் ‘ஸ்பா’ ஒன்றையும் அமைத்து, அதை செயல்பாட்டிற்கு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ‘ஸ்பா’ உரிமையாளரான திருப்பத்தூர் ஜோலார் பேட்டை சோலையூரைச் சேர்ந்த மகி (32), கள்ளக்குறிச்சி மேல்பழந் தூரைச் சேர்ந்த தூயநெஞ்சன் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், இவர்களுக்கு பாலியல் தொழில் நடத்துவதற்காக, குடோன் களை வாடகைக்கு எடுத்து தந்த புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த சிவராஜா, அவரது மனைவி பபிதா (எ) ரம்யா, நகராட்சிஅனுமதியின்றி ‘ஸ்பா’ நடத்த கட்டிடத்தை வாடகைக்கு அனு மதித்த வீட்டின் உரிமையாளரான புதுச்சாரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் ஆகியோரை தேடி வரு கின்றனர்.

‘ஸ்பா’ ஒன்றையும் அமைத்து, அதை செயல்பாட்டிற்கு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

SCROLL FOR NEXT