சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி, கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர்,குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் மற்றும் போக்ஸோவழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர்என மொத்தம் 7 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரை 124 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பவர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.