அரியலூர்: அரியலூர் சடையபடையாச்சி தெருவைச் சேர்ந்தவர் ஆராமிர்தம் மகன் மாரிமுத்து(22). இவர், கடந்த 2018-ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.