மதுரையில் காவலாளி கொலையில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கோச்சடை பகுதி யிலுள்ள தனியார் பேருந்து பணிமனை காவலாளி முரு கேசன் (65). இவர் மே 15 இரவில் பணியில் இருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை பிடிக்க காவல் துணை ஆணையர் தங்கத்துரை தலைமையில், எஸ்எஸ்.காலனி ஆய்வாளர் பூமி நாதன் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில், அதே பணிமனைக்கு சொந்தமான பேருந்துகளில் பகுதிநேர நடத்துநராக பணிபுரிந்த இருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களின் மொபைல் போன் களும் அணைத்து வைக்கப்பட் டிருந்தன.
இந்நிலையில், விருதுநகர் பகுதியில் ஒரு வீட்டில் அவர் கள் பதுங்கி இருப்பது தெரி யவந்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.
போலீஸார் நெருங்கிய போது, இருவரும் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றனர். இதில் இருவரும் காயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சேதுபதி (21). இவர், காரைக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பதும், மற்றொருவர் மதுரை பாலிடெக்னிக்கில் படிக்கும் சம்மட்டிபுரம் மணிகண்டன்(19) என்பதும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அவசரத் தேவைக்கு மொபைல் போன் ஒன்றை காவலாளி முருகேசனிடம் அடகு வைத்து ரூ.2 ஆயிரம் வாங்கியுள்ளனர்.
ஓரிரு நாளில் பணத்தை திருப்பிக் கொடுத்து மொபைல் போனை கேட்டபோது தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு வராலும் முருகேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
2 பேரும் கைது செய்யப் பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.