விழுப்புரம்: செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கு செஞ்சி அருகே கவரை கிராமத்தில் இரண்டு காலி மனைகள் உள்ளன. இதனை உட்பிரிவு செய்து தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டி கடந்த 23-02-2022-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக செஞ்சி வட்ட சார் ஆய்வாளர் அன்புமணி,பட்டா மாற்றித் தர ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜோசப் விழுப்பும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை, சார் ஆய்வாளர் அன்புமணியிடம் நேற்று ஜோசப் வழங்கியுள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் அன்புமணியை கைது செய்தனர்.